செந்தில் பாலாஜி போல் ஒருவரை பார்க்க முடியாது - அமைச்சர் ரகுபதி..!
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியான விஷயம். செந்தில் பாலாஜியின் 15 மாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் இந்த நிபந்தனை ஜாமீன்; அதனை வரவேற்கிறோம். செந்தில் பாலாஜி போல் பொறுமையோடு சட்ட போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது.
அமலாக்கத்துறை வழக்குகள் எக்கச்சக்கமாக உள்ளது ஆனால் எந்த வழக்கிலும் அவர்கள் வெற்றி பெற்றது கிடையாது; எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளார்கள்?. வழக்குகளை மட்டும்தான் அமலாக்கத்துறையினர் போடுவார்கள், இறுதி தீர்ப்புவரை அவர்கள் செல்லமாட்டார்கள். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்து கட்சி தலைமை முடிவெடிக்கும்.. முதல்-அமைச்சர் அறிவிப்பார். எங்களுக்கு அதைபற்றிக் கருத்து கூற இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.