1. Home
  2. தமிழ்நாடு

புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்..!

1

தொலை தூரத்திலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு சென்று படித்துவரும் மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் மேற்கொள்வதற்கான பஸ் பாஸ், ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறந்தவுடன் முதல் வாரத்தில் இதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த விண்ணப்பப் படிவத்தினை மாணவர்கள் மாநகர போக்குவரத்து கழகத்தில் பெற்று பூர்த்தி செய்து புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்களுக்கான புதிய பஸ் பாஸ் வழங்கும் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, மாணவர்கள் பழைய பஸ் பாஸ்யே பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like