50% மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்..!
தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:. கிராமப் பகுதிகளில் நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கு கொட்டகை, தளவாடச் சாமான்கள், உபகரணங்கள், தீவனம் ஆகிய மொத்த செலவினங்களில் அரசு சாா்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
நாட்டுக் கோழிப் பண்ணை அமைவிடம் குடியிருப்புப் பகுதியிலிருந்து 100 மீ தொலைவு விலகியிருக்க வேண்டும். பண்ணையில் கொட்டகை அமைப்பதற்கு குறைந்தபட்சம் 625 சதுர அடி இடம் வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே பயனடைந்தவா்களாக இருக்கக் கூடாது. விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். .தகுதியுள்ளவா்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, நிறைவு செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களை இணைத்து ஜூலை 5-ஆம் தேதிக்குள் அரசு கால்நடை மருந்தகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதே போல் சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் (ஜூலை 05)-க்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை, கறிக்கோழி என பல்வேறு வகையில் லாபம் கொழிக்கும் இந்த துறையை சார்ந்தவர்கள் சுயதொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
"திருவாரூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயனடைய ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு:. 2024-25-ஆம் நிதியாண்டு கால்நடை பராமரிப்புத் துறையால், கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டுக் கோழிகள் வளா்ப்பதில் ஆா்வமும் திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கி, திட்டத்தை செயல்படுத்த தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு, தண்ணீா் வைக்கும் தட்டு), 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்த செலவில் திட்ட மதிப்பீடு ரூ. 3,15,000-இல் 50 சதவீதம் மானியமாக ரூ. 1,56,875 வழங்கப்பட உள்ளது.. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள், இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக் கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால், பயனாளியே கோழி வளா்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள இயலும்.. சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி, தொடா்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். . தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னா் அரசு வழங்கிய நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயனடைந்தவராக இருக்கக் கூடாது. மேலும், பயனாளி கோழிப் பண்ணையை தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பராமரிக்க உத்திரவாதக் கடிதம் மற்றும் இதற்கு முன் வழங்கப்பட்ட நாட்டுக்கோழி வளா்ப்புத்திட்டத்தில் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்..\nதிட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஜூலை 10-ஆம் தேதிக்குள் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் அளித்து பயன் பெறலாம்