1. Home
  2. தமிழ்நாடு

ஆண்டுக்கு 18 ஆயிரம் வரை சேமிக்கலாம் - நிர்மலா சீதாராமன் தகவல்..!

1

 நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31.01.2024) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் உரையுடன் தொடங்கியது. எனவே இன்று (01.02.2024) நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் (Interim Budget 2024) செய்து உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2024-ம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை (Mathiya Budget 2024) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பல முக்கிய மற்றும் பெரிய திட்டங்கள் அறிமுக்கப்படுத்தப்படும் (Mathiya Budget 2024 Schemes) என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. அதேபோல பட்ஜெட் உரையின் போது பல பெரிய திட்டங்கள் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்புகளிலே முக்கியமான ஒன்று என்றால் அது மின்சாரப் பயன்பாட்டிற்காக சோலார் மின் உற்பத்தி தான். இதன் மூலம் மின்சார பயன்பாட்டில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய வீடுகளின் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இதற்கு முன்னர் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி அறிவித்ததை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

இதன்படி மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் திட்டமானது ஒரு கோடி வீடுகளில் இந்த ஆண்டே செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் வீடு ஒன்றுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் படி வீட்டின் சோலார் மின்சார பயன்பாட்டின் மூலம் சேமிக்கும் பணம் மற்றும் எஞ்சிய மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் என, இந்த திட்டத்தில் மூலமாக பயனடைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையில் செலவு மீதமாகும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Trending News

Latest News

You May Like