அடுப்பே இல்லாமல் அசத்தல் ரசம் வைக்கலாம்...ஜீரண சக்தியை அதிகரிக்க இது போதும்...!

அடுப்பே இல்லாமல் வெறும் 10 நிமிடங்களில் அசத்தல் சுவையில் பச்சை புளி ரசம் எப்ப செய்யலாம்
இந்த ரசத்தை செய்வது மிகவும் எளிதானது, மேலும் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த பச்சை புளி ரசத்தை சிறுவர்களும் கூட செய்யலாம் அதனை செய்ய அடுப்பே தேவைப்படாது என்பது தான் இதன் சிறப்பம்சம்.
தேவையான பொருட்கள்
புளி - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 10
சீரகம்- ஒரு தே.கரண்டி
மிளகு - அரைதே.கரண்டி
பூண்டு - ஆறு பல்
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
தக்காளி - பாதி
செய்முறை
முதலில் புளியை 10 நிமிடங்கள் வரையில் தண்ணீரில் ஊறவிட்டு, பின்னர் அதனை நன்றாக கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் உரல் அல்லது மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, தோல் உரித்த சின்ன வெங்காயம், கொத்தமல்லி இலை, தக்காளி ஆகியவற்றை போட்டு கொரகொரப்பான பதததில் அரைத்து கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கரைத்து வைத்திருக்கும் புலி தண்ணீரில் இடித்து வைத்திருக்கும் பொருள்கயைம் போட்டு, தேவையானளவு உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து கலந்துவிட்மால் அவ்வளவு தான் பார்த்ததாலே பசி எடுக்கும் பச்சை புளி ரசம் தயார்.