1. Home
  2. தமிழ்நாடு

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.6,73,551-ஐ வட்டியாகப் பெறலாம்..!

1

போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பணத்தை சேமிக்கவும் அதன் மூலம் வருமானம் ஈட்டவும் நிறைய திட்டங்கள் உள்ளன.

தபால் அலுவலகத்தின் சேமிப்புத் திட்டங்களில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டில் பெரும் வருமானத்தை பெறலாம். இது வங்கிகளில் உள்ள ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை விட அதிக லாபத்தை தருகிறது. அதேபோல, இதில் கிடைக்கும் வருமானத்திற்கு வரிச் சேமிப்பு சலுகையும் உள்ளது. இந்த திட்டத்தில் வருமான வரித்துறையின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் தள்ளுபடி பெறலாம். பொதுவாக வங்கிகள் 5 வருட FD திட்டத்திற்கு 7 முதல் 7.50 சதவீதம் வட்டி லாபம் தருகின்றன. ஆனால் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டமானது அதை விட அதிக வருமானம் தருகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம்.  அருகில் உள்ள தபால் நிலையத்தில் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கு தொடங்கலாம். கை நிறைய வருமானமும் பெறலாம்.

சிறார்கள் சார்பாக அவர்களின் பெற்றோர், தாய்மாமன், பாதுகாவலர் முதலீடு செய்யலாம். மேலும், இந்தத் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம், 7.7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.6,73,551-ஐ வட்டியாகப் பெறலாம். அதாவது, முதிர்ச்சியின்போது மொத்தமாக ரூ.21,73,551 வட்டி கிடைக்கும்.

 5 ஆண்டு முதிர்வு காலத்திற்கு முன் NSC முதலீடுகளை திரும்பப் பெற முடியாது. இருப்பினும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில், முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்

  • தகுதி : இந்திய குடிமக்கள் மட்டும்
     
  • வரி பலன்கள் : வருமான வரிச் சட்டம் 80சி பலன்கள்
     
  • திட்டத்தின் காலம் : 5 ஆண்டுகள்
     
  • குறைந்தப்பட் முதலீடு : ரூ.1000
     
  • அதிகப்பட்ச முதலீடு : வரம்புகள் இல்லை
     
  • வட்டி விகிதம் : 7.7 சதவீதம்

Trending News

Latest News

You May Like