1. Home
  2. தமிழ்நாடு

வெறும் 5 நிமிடத்தில் இ-பாஸ் வாங்கி விடலாம் : சிவ்தாஸ் மீனா..!

1

ஊட்டியில் 126வது மலர் கண்காட்சி மற்றும் 19வது ரோஜா கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் நேரில் சென்று நேற்று காலை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊட்டி மலர் கண்காட்சியில் 326 வகையான பூக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 60 ஆயிரம் பூந்தொட்டிகள் வைத்து கண்காட்சியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த 10 நாட்களில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பார்வையாளர்கள் ஊட்டி மலர் கண்காட்சியை கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வரும் மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மலர் கண்காட்சியை பசுமையாக பாதுகாப்பது அவசியம். பூக்களை சேதப்படுத்தக் கூடாது. குப்பைகளை போடக் கூடாது. 

இ-பாஸ் அமலுக்கு வந்துள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சங்கடப்பட வேண்டாம். இது மிகவும் எளிமையான வழிமுறை தான். ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும். வெறும் 5 நிமிடத்தில் இ-பாஸ் வாங்கி விடலாம். இந்த இ-பாஸ் திட்டத்திற்கு எந்த ஒரு அதிகாரியின் ஒப்புதலும் தேவையில்லை. எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம்.

ஊட்டிக்கு செல்லும் வழியில் கூட நம்முடைய மொபைல் போனில் விண்ணப்பித்து எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லை. இதில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. ஊட்டிக்கு வாருங்கள். தமிழக அரசு வரவேற்கிறது என்றார்.

Trending News

Latest News

You May Like