லாரிகள் மூலம் குடிநீர் பெற தொடர்பு கொள்ளலாம்..!
சென்னை குடிநீர் வாரியம், 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வாயிலாக, தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்கிறது. ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீர் ஒருபக்கம் இருந்தாலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னையின் குடிநீர் தேவையை பற்றாக்குறையின்றி பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044- 45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.