1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்..! எப்படி விண்ணப்பிப்பது..?

1

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களில், விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் இன்று புதன்கிழமை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்..

இதில் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தோ்வா்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னா் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவா்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி, பின்னா் விண்ணப்பிக்க இயலும்..விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைத் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

விண்ணப்பிக்கும்‌ முறை:

விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 07.05.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணி முதல்‌ 11.05.2024 ( சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌.

Trending News

Latest News

You May Like