வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்...கோவை ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை ..! உடனே விண்ணப்பீங்க..!
கோவையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் தான் ஒன்டேட்டா சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் (OneData Software Solutions).
இந்நிலையில் தான் தற்போது ஒன்டேட்டா சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: ஒன் டேட்டா சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவத்தில் தற்போது 10 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி ஃப்ரப்பி டெவலப்பர் (Frappe Developer), எச்ஆர் ரெக்ரூட்டர் ( HR Recruiter), ஜாவா டெவலப்பர்( Java Developer), பைத்தான் டிஜன்கோ (Python Django Developer), சேல்ஸ் இன்ஜினியர் ( Sales Engineer) உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதேபோல் பிசினஸ் அனலிஸ்ட் ( Businees Analyst), டேட்டா இன்ஜினியர் ( Data Engineer), ரியாக்ட் டெவலப்பர் (React Developer),க்யூஏ ஆட்டோமேஷன் இன்ஜினியர் ( QA Automation Engineer), சேல்ஸ் மேனேஜர் ( Sales Manager) உள்ளிட்ட பிரிவுகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சேல்ஸ் இன்ஜினியர் பணிக்கு மட்டும் Remote முறையில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மற்றவர்கள் அனைவரும் அலுவலகம் சென்று தான் பணியாற்ற வேண்டும்.
இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 0 -2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய வேண்டும் விரும்புவோர் தங்களின் ரெஸ்யூமை hire-india@onedatasoftware.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முறைப்படி விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
