உனக்கு பேய் புடிச்சிருக்கா.. சும்மா இருந்த சிறுமியை பிடித்து சரமாரி தாக்கும் சாமியார் !

மத்தியபிரதேசத்தின் சாட்னா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நடந்த துர்காபூஜையில், பேயோட்டுவதாக சொல்லி சிறுமியை ஒருவர் அடித்து துன்புறுத்திய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் நாடோ கிராமத்தில் நவராத்திரியையொட்டி துர்கா பூஜை நடைபெற்றது. அப்போது சிறுமி ஒருவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி ஒருவர் கடுமையாக அடித்து துன்புறுத்துகிறார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சாமியார் போன்ற ஒருவர் சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து அடிக்கிறார். அவர் வலியால் கத்தும்போது நீ யார் என்று கேட்பது தெரிகிறது. அச்சிறுமி தனக்கு பேய் பிடிக்கவில்லை என மறுத்தபோதும் தலைமுடியை இழுத்து அடிக்கிறார்.
இதனை ஏராளமானோர் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பீம் ஆர்மியை சேர்ந்த சுனில் அஸ்தே என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
घटना मप्र के सतना जिले के रामनगर थाना अंतर्गत ग्राम 'नादो' की है, एक नाबालिग लड़की के साथ आरोपी इश्वरदीन गुप्ता द्वारा सार्वजनिक स्थल पर अंधविश्वास एवं पाखंडवाद के नाम पर लड़की के लाख मना करने के बावजूद बर्बरता पूर्ण तरीके से सभी के समक्ष मारपीट कर रहा है। 1/1@ChouhanShivraj pic.twitter.com/Vd1NGZ2UeB
— बहुजन शेर सुनिल अस्तेय 🇮🇳 (@SunilAstay) October 25, 2020
newstm.in