தமிழகத்தில் 5 நாட்கள் மஞ்சள் சந்தை இயங்காது..!
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தால் மஞ்சள் சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மஞ்சள் சந்தையில் இருந்து தான் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் மஞ்சள் சந்தையில் நல்ல தரமான மஞ்சள் டன் கணக்கில் ஏலம் விடப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நவ.12ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நவம்பர்.10 முதல் நவம்பர்.14ம் தேதி வரை மஞ்சள் சந்தை இயங்காது என கூட்டுறவு விற்பனைச் சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், தீபாவளி முடிவடைந்து நவ.15 ஆம் தேதி முதல் வழக்கம் போல மஞ்சள் சந்தை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.