1. Home
  2. தமிழ்நாடு

கோவை வந்த யமதர்மன்..! விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி..!

Q

கோவை மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் சார்பில் கள்ள சாராயம், மற்றும் மது ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கதிரவன் நாடக கலைக்குழுவினர் நடத்தினர். இந்த நாடகத்தில் நாடகக்குழுவினர், தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்து வரும் நபரை யமலோகம் அழைத்து செல்ல யமனும், சித்திரகுப்தனும் பூமிக்கு வந்தது போலவும், அந்த நபர் யமனை கண்டதும் கடைசியாக ஒரு முறை திருந்த வாய்ப்பு கேட்பது போலவும் காட்சி அமைத்து நடித்தனர்.
கள்ளச்சாராயத்தின் பாதிப்பு என்ன என்பதை பற்றி மனைவி சொல்லியும் ஏன் கேட்கவில்லை? திருமணம் ஆகி மகன், மகள் உள்ளனரே, அவர்கள் கல்வி எதிர்காலம் பற்றி அக்கறை இல்லையா? என யமன் கேட்க, அதற்கு அந்த நபர் தன் உயிரை பாசக்கயிறை வீசி எடுத்துவிடவேண்டாம் எனவும் தான் இதைவிட்டு திருந்திவிடுகிறேன் என யமனிடம் கேட்டதால் அவர் விட்டு செல்வது போலவும் நாடகம் அமைக்கப்பட்டது.
இதை கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.
நாடகத்தில் திருந்திய அந்த நபர், யமனிடம், இன்று கல்லூரி செல்லும் சில மாணவர்கள் கூலிப், பாண் பராக் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களை என்னவென்று கேளுங்கள் என கோரிக்கை வைப்பது போல நாடகம் நடந்தது. இது நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை எடுத்துகொள்வது போல அமைந்தது. 

Trending News

Latest News

You May Like