விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு..! 9 எம்எம் பிஸ்டல், ஸ்டன் கன்னுடன் மூலம் 8 சிஆர்பிஎஃப் காவலர்கள் பாதுகாப்பு..!

நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பிப்ரவதி மாதத்தில் வெளியாகி இருந்தது. இதன் மூலம் 8 முதல் 11 சிஆர்பிஎஃப் காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர். ஒரே நேரத்தில் இல்லாமல் சுழற்சி முறையில் விஜய்க்கு இவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு விஜய் தரப்பில் பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிடம் கடிதம் அளிக்கப்பட்டதாகவும், அது பரிசீலனையில் இருந்த நிலையில் உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் வீரர்களின் மூன்று பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மெஷின் கண்ணுடன் விஜயின் வீட்டில் பாதுகாப்பில் இருப்பர். மற்ற எட்டு பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். 9 எம்எம் பிஸ்டல், ஸ்டன் கன்னுடன் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு முன்பே விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதும் விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
அவரது தனிப்பட்ட பவுன்சர்களே பாதுகாப்பு வழங்கி வந்தனர். இந்த நிலையில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவதில் தாமதம் ஏன் என விசாரித்த போது தற்போது உள்துறை அமைச்சகத்தின் பட்டியல் உள்ளூர் காவல்துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளுடன் ஆய்வு செய்த பிறகு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆய்வு முடிந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பை விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் மார்ச் 14ஆம் தேதி முதல் அவருக்கு 11 மத்திய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.