பாகிஸ்தானில் எக்ஸ் X தளத்திற்கு தற்காலிகமாக தடை..!

பாதுகாப்பு நலன் கருதி பாகிஸ்தானில் எக்ஸ் X தளத்திற்கு தற்காலிகமாக தடை விதித்து அந்த நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளதாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
மேலும் கடந்த 2 மாதங்களால எக்ஸ் தளத்தை பயன்படுத்துவதில் தடங்கல் இருந்துவந்த நிலையில் தடை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அரசின் உத்தரவுக்கு இணங்க பல்வேறு கணக்குகள் மற்றும் பதிவுகளை அந்த நிறுவனம் நீக்காததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்காவிட்டால் பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.