1. Home
  2. தமிழ்நாடு

சியோமி நிறுவனம் தயாரித்துள்ள மின்சார காரின் விலை வெளியானது! எவ்வளவு தெரியுமா ?

1

சியோமி நிறுவனம்  2021 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அடியெடுத்து வைப்பதாக அறிவித்தது. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் கார் எப்படி இருக்கும் என்பதற்கான படங்களையும் வெளியிட்டது. அந்த புகைப்படங்களைப் பார்த்த சமுக வலைதளவாசிகள் இந்த கார் Tesla மற்றும் Porche ஆகிய இரண்டு கார்களின் கலவையாக இருக்கும் என, கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.
 
சீனாவில் ஸ்பீடு அல்ட்ரா 7 (SU7) என்ற பெயரிடப்பட்டுள்ள ஜியோமி கார் விற்பனைக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. வெறும் 5.3 வினாடிகளில் காரை 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தி க்ளோபல் ரெக்காட் செய்துள்ளதாக Xiaomi தெரிவித்துள்ளது.அடாப்டிவ் BEV டெக்னாலஜி, ரோட்-மேப்பிங் வசதி உள்ளது.SU7 ஆனது LiDAR, பதினொரு HD கேமராக்கள், மூன்று மில்லிமீட்டர் அலை ரேடார்கள் மற்றும் பன்னிரண்டு அல்ட்ராசோனிக் ரேடார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.உட்புறத்தில் 16.1-இன்ச் 3K சென்ட்ரல் கன்சோல், 7.1-இன்ச் சுழலும் டாஷ்போர்டு மற்றும் 56-இன்ச் HUD (Heads-up display) உள்ளது.கூடுதல் வசதி தேவைப்பட்டால் பின்புற இருக்கைகளில் 2 Tablet-களை பொறுத்திக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் சியோமி எஸ்யூ7 விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்யூ7 (SU7), எஸ்யூ7 ப்ரோ (SU7 Pro) மற்றும் எஸ்யூ7 மேக்ஸ் (SU7 Max) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதில் ஆரம்ப நிலை வேரியண்டே ஓர் முழு சார்ஜில் 700 கிமீ ரேஞ்ஜை தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

எஸ்யூ7 தேர்வின் சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 73.6 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 220kW பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வளவு சூப்பரான பவரையும், ரேஞ்ஜையும் வழங்கக் கூடிய இந்த தேர்விற்கு 215,900 யுவான்களே விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் 25.36 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Trending News

Latest News

You May Like