1. Home
  2. தமிழ்நாடு

திருக்கோவிலூர் இடைத்தேர்தல் தொடர்பாக தவறான அறிவிப்பு இடம்பெற்றுவிட்டது – சத்தியபிரதா சாகு..!

Q

தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதற்கட்ட மக்களவைத் தேர்தல் தேதியின்போது, தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியன்றே விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதியும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையில் திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தல் எனக் குறிப்பிடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதி உடனடியாக மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. மாவட்டங்களில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவர். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க வீடு வீடாக சென்று படிவம் விநியோகிக்கப்படும். 
விளவங்கோடு தொகுதி
க்கு மட்டும்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை. பொன்முடியே மீண்டும் எம்எல்ஏவாக தொடர்கிறார். தேர்தல் ஆணையத்துக்கு அளித்த பட்டியலில்
திருக்கோவிலூர் தொகுதி
தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. அதை உடனே நீக்கிவிட்டோம் என விளக்கம் அளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like