1. Home
  2. தமிழ்நாடு

எழுத்தாளர் கர்ணன் காலமானார்.. பல்வேறு தலைவர்கள் இரங்கல் !

எழுத்தாளர் கர்ணன் காலமானார்.. பல்வேறு தலைவர்கள் இரங்கல் !


தமிழகத்தின் முதுபெரும் மணிக்கொடி எழுத்தாளரான ப. கா்ணன் (84) உடல் நலக்குறைவால் தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார்.

தொழில் ரீதியாகத் தையல் கலைஞரான இவர், வாடகை வீட்டில் இருந்தபடியே எழுதிக் குவித்தவர். ஆரம்பக் கல்வி வரை படித்துள்ள எழுத்தாளா் கா்ணனின் முதல் சிறுகதையான ‘நீறுபூத்த நெருப்பு’  1958-இல் காவேரி மாத இதழில் வெளியானது.

சிறுகதை, கட்டுரை, குறுநாவல், சுதந்திரப் போராட்ட வரலாறு என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தினமணிக் கதிர், கல்கி, தீபம், கலைமகள், ஆனந்த விகடன், அமுதசுரபி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், குறுநாவல்கள், தொடா்கதைகள், சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த படைப்புகளை எழுதியுள்ளார்.

இவரது படைப்பான, ‘அவா்கள் எங்கே போனார்கள்’ என்ற சுதந்திரப் போராட்ட வரலாற்று நூல் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் 2005-ஆம் ஆண்டில் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.
 
இவரது படைப்புகளுக்கு மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை 2008-இல் பணமுடிப்பு வழங்கிப் பாராட்டியது. இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவரது மனைவி ரஞ்சிதம் ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனா். தமிழக அரசின் முதிர்ந்த தமிழறிஞா்களுக்கான உதவித் தொகையைப் பெற்று, மதுரை செல்லூரில் வாடகை வீட்டில் எழுத்தாளா் கா்ணன் வசித்து வந்தார்.

தனது இறுதிக் காலம் வரை எழுதுவதை நேசித்தவா். இலக்கியக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்பவா். சிறிது நாள்களாக  உடல் நலக்குறைவால் இருந்த கா்ணன் நேற்று காலமானார். 

newstm.in

Trending News

Latest News

You May Like