வாவ்... சூப்பர்... சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ள பாசுமதி அரிசி..!
சர்வதேச அளவில் உணவு பட்டியல் தரவரிசையை வெளியிடும் டேஸ்ட் அட்லஸ் எனும் அமைப்பு 2023 – 2024ம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான உணவு தரவாரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் சுவையான 100 உணவு பொருட்களில் இந்தியா 11 சிறந்த உணவுகளை கொண்டுள்ளது என அறிவித்துள்ளது.
மேலும், அரிசி தரவரிசையில் இந்தியாவில் பெரும்பான்மையாக பயிரிடப்படும் பாசுமதி அரிசி முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பாசுமதி அரிசி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மொத்தமாக 34 ரக பாசுமதி அரிசி பயிரிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்து இரண்டாம் இடத்தில், இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ அரிசி வகையும், மூன்றாவது இடத்தில் போர்ச்சுகலின் கரோலினோ அரிசி வகையும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் டேஸ்ட் அட்லஸ் அமைப்பு, இந்தியாவைச் சேர்ந்த மேங்கோ லஸ்ஸியை உலகின் சிறந்த பால் பானம் என்று அறிவித்துள்ளது. பல வகையான லஸ்ஸிகளில், இந்த இனிப்பு மாம்பழ லெஸ்ஸியானது இந்திய உணவகங்களின் மெனுவில் அதிகமாக இடம் பெற்றுள்ள வகையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.