இப்படி கூட செய்வார்களா ? திருடர்களை கண்டுபிடிக்க எலி மருந்தை கலந்த மாணவி..!
ஆரணி களம்பூரில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி மாணவி ஒருவர் தினமும் மிக்சரை சாப்பிட பையில் கொண்டுவந்துள்ளார். மாணவி தினமும் கொண்டு வரும் மிக்சரை சக மாணவர்கள் சிலர் திருடிச் சாப்பிட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவி, திருடி சாப்பிடுவது யார் என்பதை கண்டறிய வழக்கம் போல் மிக்சரை பள்ளிக்கு கொண்டு வந்துள்ளார். மிக்சரில் எலி மருந்தை கலந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறியாத சக மாணவர்கள், வழக்கம் போல் பையில் இருந்த மிக்சரை எடுத்து சாப்பிட்டனர். அப்போது எனது மைச்சரை யார் எடுத்துச் சென்றது என்பதை கண்டறிய எலி மருந்தை கலந்து கொடுத்ததை அறிந்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், மிக்சரை கொண்டு வந்து சாப்பிட்ட சக மாணவிகள் 8 பேர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தனர். பின்னர் மாணவிகளை ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.