தூய்மை பணியாளர் வாங்கிய டீயில் புழு... அலட்சியமாக பதில் அளித்த உரிமையாளர்..! கொந்தளித்த நெட்டிசன்கள்..!
கோவை ராஜவீதி பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சதீஷ், முத்துக்குமார், அறிவழகன், உதயகுமார் ஆகியோர் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்குள்ள சூர்யா பேக்கரியில் ஐந்து பேரும் டீ குடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அந்த டம்ளரில் புழு ஒன்று இருந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு நீங்கள் சாக்கடையில் பணி புரிகிறீர்கள் உங்களிடமிருந்து தான் அந்த புழு வந்துள்ளது என பேக்கரி நிர்வாகி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தூய்மை பணியாளர்கள் கடைவீதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள் " அவர் சுத்தம் செய்வதால் தான் நாம் நோயின்றி வாழ்கிறோம் எனவும் மாற்றுருவர் தூய்மை பணியாளர்கள் என்றல் உங்களுக்கு அவ்வளவு கேவலமா ? கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுங்க சார் என தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்