1. Home
  2. தமிழ்நாடு

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறப்பு..!

1

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு  ஆந்திராவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  விஜயவாடாவில் உள்ள சுவராஜ் மைதானத்தில் உலகில் உள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே மிக உயரமான 206 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் உயரம் 125 அடியாக உள்ள நிலையில்,  அடி பீடம் 81 அடி உயரம் கொண்டதாக கட்டப்பட்டு அதற்கு சமூக நீதிக்கான சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்கிறார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள இச்சிலை, அங்குள்ள அம்பேத்கர் ஸ்மிரிதி வனத்தில் 81 அடி பீடத்தின் மேல் 125 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 18.81 ஏக்கர் பரப்பளவில், ரூ. 404.35 கோடி செலவில் இந்தச் சிலையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

இந்த 125 அடி சிலை எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 400 மெட்ரிக் டன் துரு பிடிக்காத எஃக்கும், 120 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலையின் பீடம், பவுத்த கட்டடிக் கலையின் காலச்சக்கர மண்டலம் போல வடிவமைக்கப்பட்டள்ளன. பீட பகுதி மட்டும் 11,140 கன மீட்டர் கான்க்ரீடாலும், 1445 மெட்ரிக் டன் டிஎம்டி கம்பிகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இளஞ்சிவப்பு மணல்கற்கள் பூச்சுக்கொண்டுள்ளது.

இந்த நினைவுச் சின்னத்தின் முன்புறத்தில் ஆறு நீர்நிலைகள் உள்ளன. மையத்தில் ஓர் இசை செயற்கை நீரூற்றும் உள்ளது. இந்தச் சிலைக்கானத் திட்டதில் 2 ஆண்டுகளாக 55 தொழில்நுட்ப மற்றும் உதவியாளர்களுடன் 500 முதல் 600 ஆட்கள் தினமும் வேலை செய்துள்ளனர்.

சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எக்பிரீயன்ஸ் சென்டர், 2000 பேர் அமரக்கூடிய வகையில் மாநாட்டு அரங்கம், உணவு அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு இடம், நீர் நிலைகளை, இசை நீரூற்று, நடைபாதைகள் ஆகியவை அமைந்துள்ளன. டாக்டர் அம்பேத்கர் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் அவரின் வாழ்க்கைத் தொடர்புடைய விஷயங்கள் மின்னணு காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்படும்.

சிலை குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே மகுடமாக விளங்கும் இந்தச் சிலை சமூக நீதிக்கான மிகச் சிறந்த சிற்பம்” என்று வர்ணித்துள்ளார்.

 

Trending News

Latest News

You May Like