ஜனநாயக கடமையை சரியாக செய்த உலகின் குள்ளமான பெண்..!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்று துவங்கி வருகிற ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது, தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது. உலகின் மிகவும் குள்ளமான பெண்மணி என கின்னஸ் உலக சாதனை படைத்த ஜோதி ஆம்கே நாகபூர் தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
#Maharashtra: World's shortest woman Jyoti Amge casts her vote in Nagpur#ChunavKaParv #DeshKaGarv #IVoteForSure #LokSabhaElections2024 #LoktantraKaUtsav pic.twitter.com/mW82quGLWh
— DD News (@DDNewslive) April 19, 2024