1. Home
  2. தமிழ்நாடு

அசைவ உணவுகளை தடை செய்த உலகின் முதல் நகரம்..!

1

இஸ்ரேலின் டெல் அவிவ் 'உலகின் சைவத் தலைநகரம்' (Vegan Capital of the World) என்று அறியப்படுவது போல இந்தியாவின் சைவ நகரமாக ’பாலிதானா’ நகரம் கருதப்படுகிறது.

எங்கு இருக்கிறது இந்த நகரம், என்ன காரணத்திற்காக இந்த பழக்கத்தை பின்பற்றுகின்றனர் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லை. நகரத்தில் இறைச்சி, முட்டைகளை விற்பது கூட சட்டவிரோதமானது.அதுமட்டும் இல்லாமல் பாலிதானாவில் ஒரே மலையில் 900க்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பது மேலும் சிறப்பாகும்.சமண மதத்தின் தலமாக இருப்பதே இந்த இடம் சைவ நகரமாக இருப்பதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

பாலிதானா 100 சதவீதம் சைவ நகரமாக முற்றிலும் மாறியது 2014 ஆம் ஆண்டிலிருந்து தான்.அந்த ஆண்டில், 200 ஜைன துறவிகள் 250 இறைச்சிக் கடைகளைத் தடைசெய்து, நகரத்தை இறைச்சியற்ற மண்டலமாக அறிவிக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சமண மதத்தை பொறுத்தவரை மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்பது அவர்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.

விலங்குகளை சாப்பிடும் வழக்கம் இவர்களிடம் இல்லை. நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளை கூட இவர்கள் தவிர்கிறார்கள்.இப்படியான, சமண மதத்தை கடைப்பிடிப்பவர்களின் கோரிக்கைகள் மற்றும் உணர்வுகளை மதிக்கும் விதமாக பாலிதானாவில் இறைச்சியை அரசாங்கம் தடை செய்தது.நகரத்தில் இறைச்சி மற்றும் முட்டைகள் விற்கப்படுவதில்லை மற்றும் உட்கொள்ளப்படுவதில்லை என்றாலும், பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு உட்கொள்ளப்படுகின்றன.

Trending News

Latest News

You May Like