1. Home
  2. தமிழ்நாடு

தமிழக கடல் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் குண்டு கண்டுபிடிப்பு!

தமிழக கடல் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் குண்டு கண்டுபிடிப்பு!


மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 2ஆம் உலகப் போரின் குண்டு ஒன்று காவல்துறையினரால் பாதுகாப்பாக வெடிக்கப்பட்டது.

சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் கடந்த 15ஆம் தேதி மீனவர்கள் வலையில், ஒருமீட்டர் உயரமும், 11 இன்ச் சுற்றளவும் கொண்ட ராக்கெட் லாஞ்சர் வடிவிலான சிகப்பு நிற பொருள் சிக்கியது. அதனை கைப்பற்றிய கடலோர காவல்படை கியூ பிரிவு போலீசார் பாதுகாப்பான இடத்தில் மண்ணில் புதைத்து வைத்தனர். இதனையடுத்து திருச்சி மற்றும் நாகையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர் குழுவினர் சோதனை செய்ததில், அந்தப் பொருள் நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமானத்திலிருந்து, எதிரிகள் இலக்கை தாக்க பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர் வகை என்பது தெரியவந்தது. 


இவ்வகை குண்டுகள் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டவை என்றும், துருப்பிடித்திருந்த காரணத்தால், எந்த நாட்டின் தயாரிப்பு என்பது தெரியவில்லை என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருமுல்லைவாசல் கடற்கரையில் மண்ணுக்கு அடியில் குண்டு வெடிக்கச்செய்யப்பட்டது. அந்த குண்டு 300 மீட்டர் அளவிற்கு வெடித்துச்சிதறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like