1. Home
  2. தமிழ்நாடு

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்..!

Q

இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ், மீண்டும் ஒருமுறை உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளார்.
க்ரோஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர்யுனைடெட் க்ரோஷியா ரேபிட் & பிளிட்ஸ் 2025 (SuperUnited Croatia Rapid & Blitz 2025) ரேபிட் பிரிவில், கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், கார்ல்சனைத் தோற்கடித்து ஒற்றை முன்னிலை பெற்றுள்ளார்.
இந்தத் போட்டிக்கு முன்னர், மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வடிவங்களில் குகேஷ் "பலவீனமான வீரர்களில் ஒருவர்" என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார். இத்தகைய சூழலில், இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றி, கார்ல்சனின் கருத்துக்கு குகேஷ் சதுரங்கப் பலகை மூலம் அளித்த அழுத்தமான அமைந்துள்ளது.
இது குகேஷ், கார்ல்சனை ரேபிட் செஸ்ஸில் ஐந்தாவது வெற்றியாகும். வீழ்த்துவது இது தொடர்ச்சியான இப்போட்டிக்கு முன்னரும், நோர்வே செஸ் 2025 இல் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம், குகேஷ் தற்போது க்ராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் 10 புள்ளிகளுடன் தனித்து முன்னிலை வகிக்கிறார். இது அவரது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியாகும். கார்ல்சனின் முந்தைய கருத்துக்களுக்கு மாறாக, குகேஷ் ரேபிட் வடிவத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like