"சர்வதேச சட்டத்தை உலக நாடுகள் மதிக்க வேண்டும்" : அமைச்சர் ஜெய்சங்கர்
"சர்வதேச சட்டத்தை உலக நாடுகள் மதிக்க வேண்டும்" : அமைச்சர் ஜெய்சங்கர்

முன்னணி நாடுகள் சர்வதேச சட்டத்தின் நெறிமுறைகளை மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், பாதுகாப்பு பிரச்னைகள், பிராந்திய மற்றும் உலக நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், உலகின் முன்னணி குரல்கள் அனைத்து வகையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். சர்வதேச சட்டங்களை மதிப்பது, பலதரப்பு வாதங்களை ஆதரிப்பது, பொதுவான நன்மைகளை ஊக்குவிப்பது ஆகியவை நிலையான உலகை உருவாக்குவதற்கான வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.
newstm.in