பிரபல வங்கியில் வேலை…டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.72,000 சம்பளம்!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited) தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை கொண்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- பதவியின் பெயர்: Probationary Officer
- காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Probationary Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு பட்டப்படிப்பையும் (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Probationary Officer பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கலாம்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025 Probationary Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8,64,000 சம்பளமாக வழங்கப்படும் (மாதம் ரூ.72,000 சம்பளம்).
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் Probationary Officer பணிக்கு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025
எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் இல்லை. ஆன்லைன் வழியாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் சரியான இமெயில் மற்றும் செல்போன் எண்களை வழங்க வேண்டும். 12.08.2025 முதல் 020.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.