வெளிநாட்டு நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!

தருமபுரியில் வேலை வாய்ப்பு வழங்க மறுக்கும் வெளிநாட்டு நிறுவனத்தைக் கண்டித்து, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் அதகப்பாடி கிராமத்தில் பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்ட இண்டிகிரா கிரானைட் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் வேலை செய்த நிரந்தர தொழிலாளர்கள் சிலரை, கொரோனாவை காரணம் காட்டி எவ்வித முன்னறிவிப்பும், இன்றி கடந்த மே மாதம் பணியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டத்தை மீறி தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கிய நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரியும் தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானார் பங்கேற்றனர்.