1. Home
  2. தமிழ்நாடு

கனவுகளை தொலைத்து சென்னையை காலிசெய்யும் தொழிலாளர் குடும்பங்கள்.. காலியாகும் வீடுகள் !

கனவுகளை தொலைத்து சென்னையை காலிசெய்யும் தொழிலாளர் குடும்பங்கள்.. காலியாகும் வீடுகள் !


கொரோனா ஊரடங்கால் வேலை இழப்பு, வருமானம் பாதிப்பு, வாடகை கொடுக்க முடியாமல் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது போதாத காலம்.

ஆமாம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் வழக்கம்போல் செயல்பட முடியாத நிலை. 
கனவுகளை தொலைத்து சென்னையை காலிசெய்யும் தொழிலாளர் குடும்பங்கள்.. காலியாகும் வீடுகள் !

குறிப்பாக சென்னையில் தொற்று அதிகம் இருப்பதால், இருமுறை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அலுவலகங்களை திறக்க அனுமதி வழங்கினாலும்,தொற்று அச்சத்தால் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.

பல சிறுதொழில் நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளன. கனவுகளை தொலைத்து சென்னையை காலிசெய்யும் தொழிலாளர் குடும்பங்கள்.. காலியாகும் வீடுகள் !

சாலையோரம் இருக்கும்  கடைகள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த கடைகளை திறக்க முடியவில்லை. அவ்வாறு திறந்தாலும் கொரோனா அச்சத்தால் வாடிக்கையாளர்கள் வராததால் நஷ்டம் ஏற்படுகிறது. 

அந்த வகையில் வருவாய் இல்லாத நிலையில், பலரும் வீடுகளை காலி செய்துகொண்டு சொந்த ஊருக்கு செல்வது அதிகரித்துள்ளது.

கனவுகளை தொலைத்து சென்னையை காலிசெய்யும் தொழிலாளர் குடும்பங்கள்.. காலியாகும் வீடுகள் !

தனியார் நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கும் இதே நிலை. கடந்த 3 மாதங்களாக வேலை இல்லாததால் வருமானம் இல்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. 3 வேளை சாப்பிடுவதே சிரமமாக இருக்கிறது என்று என்று கண்ணீர் மல்க கூறி வீட்டை காலிசெய்துசொந்த ஊருக்கு செல்கின்றனர்.  

இவ்வாறு பல குடும்பங்கள் வீடுகளை காலிசெய்து, சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலஇடங்களில் ‘வீடு வாடகைக்கு’பலகைகளை காணமுடிகிறது.

newstm.in 

Trending News

Latest News

You May Like