1. Home
  2. தமிழ்நாடு

கதறும் தொழிலாளர்கள்..! வால்பாறையில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு..!

1

வால்பாறையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள ஊசிமலை தேயிலை தோட்ட பகுதியில் மாநில தொழிலாளர்களின் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது. அங்கிருந்த புதரில் பதுங்கி இருந்த சிறுத்தை, குழந்தையை தாக்கியுள்ளது.

இது குறித்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லவும், குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லவும் பயமாக உள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

Trending News

Latest News

You May Like