1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிட பணிகள் ஓரு வாரத்தில் முடிவடையும் - அமைச்சர் எ.வ. வேலு..!

1

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகள் 97 சதவீதம் முடிவடைந்து விட்டது. 

கருணாநிதி நினைவிடத்துடன் சேர்த்து அண்ணா நினைவிடமும் புதுப்பிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். அதன்பின் முதல்வரிடம்  கலந்தாலோசித்து தேதி பெற்று நினைவிடம் திறக்கப்படும். மதுரவாயல் - துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு பாலம் கட்ட ஏற்கனவே மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அண்ணா மேம்பாலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. 

ஓரிரு மாதங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்ணா மேம்பாலத்தை திறந்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like