வீட்டில் இருந்து பணியாற்றுங்கள்.. அரசு அதிரடி உத்தரவு..!
தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், டில்லியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தனியார் அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணி சார்ந்த தனியார் அலுவலகங்கள் மட்டுமே செயல்படலாம் என்று டில்லி பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மதுபான விடுதிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.