இஸ்ரோவில் வேலை..! 10-ம் வகுப்பு, என்ஜீனியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ (ISRO) இந்தியப் பிரதமரால் நேரடியாகக் கண்காணிக்கப்படும் விண்வெளித் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பொறியியலாளர், உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 224 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: சயின்டிஸ்ட்/என்ஜினீயர், டெக்னீக்கல் அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட், லைப்ரேரி அசிஸ்டென்ட், டெக்னீசியன் - பி மற்றும் டிராப்ட்ஸ்மேன், ஃபயர்மேன், சமையலர், இலகு ரக வாகன ஓட்டுநர்
காலி பணியிடங்கள்: 224 (சயின்டிஸ்ட்/என்ஜினீயர் - 5, டெக்னீக்கல் அசிஸ்டென்ட் - 55, சயின்டிபிக் அசிஸ்டென்ட் - 6, லைப்ரேரி அசிஸ்டென்ட் - 1, டெக்னீசியன் - பி மற்றும் டிராப்ட்ஸ்மேன் - 142, ஃபயர்மேன் - 3, சமையலர் - 5, இலகு ரக வாகன ஓட்டுநர் - 6)
கல்வித்தகுதி:
- சயின்டிஸ்ட்/என்ஜினீயர் - பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி, பிஎஸ்சி, எம்எஸ்சி.
- டெக்னீக்கல் அசிஸ்டென்ட் - டிப்ளமோ என்ஜினீயரிங்
- சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பிஎஸ்சி
- லைப்ரேரி அசிஸ்டென்ட் - Master's Degree in Library Sciences/ Library & Information Science
- டெக்னீசியன் - பி மற்றும் டிராப்ட்ஸ்மேன் - 10-ம் வகுப்பு, ஐடிஐ
- ஃபயர்மேன், சமையலர், இலகு ரக வாகன ஓட்டுநர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியை பொறுத்து வயது வரம்பு என்பது மாறுபடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
- சயின்டிஸ்ட்/என்ஜினீயர் - மாதம் ரூ. 56,100 - ரூ. 1,77,500
- டெக்னீக்கல் அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட், லைப்ரேரி அசிஸ்டென்ட் - மாதம் ரூ. 44,900 - ரூ. 1,42,400
- டெக்னீசியன் - பி மற்றும் டிராப்ட்ஸ்மேன் - மாதம் ரூ. 21,700 - ரூ. 69,100
- ஃபயர்மேன், சமையலர், இலகு ரக வாகன ஓட்டுநர் - மாதம் ரூ. 19,900 - ரூ. 63,200
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.ursc.gov.in/jobs/jobs.jsp என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.02.2024