1. Home
  2. தமிழ்நாடு

லஞ்சம் தரமாட்டியா ? ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தை கிழித்த தபால்காரர்!

1

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஒருவருக்கு கடந்த அக்டோபர் 19ம் தேதி தபால் மூலம் பாஸ்போர்ட் கிடைத்தது. அதை பெறுவதற்காக அந்த நபர் தனது நண்பருடன் தபால் நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட் குறித்து தபால்காரரிடம் கேட்டுள்ளார். பாஸ்போர்ட் வேண்டும் என்றால் ரூ.500 லஞ்சம் கொடுக்க வேண்டும், அப்போது தான் தருவதாக தபால்காரர் கூறினார்.

ஆனால், 'லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம்' எனக்கூறி பணத்தை தர மறுத்துவிட்டார் சம்பந்தப்பட்டவர். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், கோபமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தை கிழித்து எறிந்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தபால்காரரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சென்றவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். வீடியோ ஆதாரத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அதே தபால்காரர் கிராமத்திற்கு வரும் போது ஒவ்வொருவருக்கும் தபால் அனுப்ப ரூ.100 லஞ்சம் வாங்கியதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.இந்நிலையில் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like