இனி இஸ்ரேலுக்கு சீருடைகளை தைக்க மாட்டோம் : கேரள நிறுவனம்..!

கூத்துபறம்பில் அமைந்துள்ள மரியன் ஆடைகள் நிறுவனம் கடந்த 8 வருடங்களாக இஸ்ரேல் காவல் படைக்கு, இஸ்ரேலில் உள்ள ஒரு முகமை வழியாக சீருடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்து வந்துள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சம் காவலர்களுக்கான சீருடைகள் இங்கிருந்து தயாரித்து அனுப்பப்படும். இந்த நிலையில், மனிதத்துவ அடிப்படையில் இஸ்ரேலுக்கு இனி இஸ்ரேலுக்கு உடைகள் தயாரிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது அந்நிறுவனம்.
இது குறித்து மரியன் ஆடைகளின் நிர்வாக இயக்குநர் தாமஸ் ஒலிக்கல் பேசுகையில், “மீண்டும் அமைதி திரும்பும்வரை, இஸ்ரேலுக்கு உடைகள் தயாரிப்பதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இது நிறுவனத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என்கிறார்கள் நிறுவனத்தினர்.