1. Home
  2. தமிழ்நாடு

பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நிறைவேற்றம்..!

1

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மகப்பேறு தொடர்பான விவகாரங்களிலும் பெண்களுக்கென தனி உரிமை வழங்கப்படுகிறது. அதாவது, குழந்தையை சுமப்பதில் இருந்து கருக்கலைப்பு செய்வது வரைக்கும் பெண்ணுக்கு தனி உரிமை வழங்கப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் உறுதியளித்துள்ளார். மேலும், பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்பது தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பெண்களின் கருக்கலைப்பு உரிமை பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மசோதா செனட் சபைக்கு அனுப்பப்பட இருக்கிறது. அங்கும் உரிமை நிறைவேற்றம் செய்யப்பட்டால் பெண்களின் கருக்கலைப்பு உரிமை சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like