1. Home
  2. தமிழ்நாடு

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவி தொகை வழங்கப்படும்..!

1

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக  நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.


பதவி ஏற்புக்கு பின்னர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் (டிசம்பர்) பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகையாக வழங்கப்படும் என்றார். பின்னர் இது தொடர்பான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

49 வயதான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் முதல்வராக பதவியேற்பது இது 4-வது முறையாகும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்டிருந்த அவர் 39 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Trending News

Latest News

You May Like