1. Home
  2. தமிழ்நாடு

குடும்ப தலைவி அல்லாத பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்! அது எப்படி?

1

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் வட்டாச்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் ரூ. 1000 கிடைக்கும். 

அதாவது, ஒரு குடும்பத்தில் தந்தை மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அவர்களின் வீட்டில் தாய் உயிருடன் இல்லை என்றால், 21 வயது நிரம்பிய மூத்த பெண்ணுக்கு இந்த தொகை கிடைக்கும். அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் சரியாக இருந்தால் அவர்களுக்கு தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

அதேபோல் விவாகரத்து பெற்ற பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனியாக ரேஷன் அட்டை வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும். 

Trending News

Latest News

You May Like