கூச்சலிட்ட பெண்கள்..!புறநகர் ரயிலில் நிர்வாணமாகத் தோன்றிய நபர்..!
மும்பையில் கடந்த திங்கள்கிழமை சிஎஸ்எம்டி-கல்யாண் விரைவு ஏசி லோக்கல் ரெயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாண ஆண் ஒருவர் உள்ளே வந்து நின்றதால் பெண்கள் மத்தியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தை வீடியோ பதிவு செய்த பயணி ஒருவர் அதைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்தச் சம்பவம் வைரலாகி வருகின்றது. மாலை 4:11 மணிக்கு ரெயில் காட்கோபர் நிலையத்தை அடைந்தபோது, பெண்கள் கோச்சின் கதவு அருகே அந்த நபர் ஏறி நின்றார்.
பெண் பயணிகளின் கூச்சலை தொடந்து பக்கத்து பெட்டியில் இருந்த ஒரு டிக்கெட் பரிசோதகர் விரைந்து வந்து அந்த நபரை வெளியேறினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் ரெயில்வே போலீஸ் அந்த ஆசாமியைத் தேடி வருகிறது.