1. Home
  2. தமிழ்நாடு

த்ரோபால் போட்டிகளில் கலக்கிய பெண்கள்!

1

கோவை கிராமப்புற பெண்களை விளையாட ஊக்குவிக்கும் நோக்கில், ஈஷாவுடன் இணைந்து புள்ளாக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த பெண்கள் சார்பில் தொண்டாமுத்தூர் வட்டார அளவில் பெண்களுக்கான த்ரோபால் (எறிபந்து) போட்டியை நேற்று (01-05-24) நடத்தபட்டது. இந்தப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்த ஈஷாவின் கிராமோத்சவமே ஊக்கம் அளித்தாக அவர்கள் கூறினர்.

இப்போட்டிகள் புள்ளாக்கவுண்டன் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் தேவராயபுரம், பூலுவப்பட்டி, நல்லூர்வயல், தென்னமநல்லூர், மத்வராயபுரம் போன்ற சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 9 அணிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 
இதில் முதல் இடத்தை பசுமை புள்ளாக்கவுண்டன் புதூர் A அணியும், 2-ஆம் இடத்தை தேவராயபுரம் அணியும், 3-ஆம் இடத்தை பூலுவப்பட்டி அணியும், 4-ஆம் இடத்தை பசுமை புள்ளாக்கவுண்டன் புதூர் B அணியும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி திரு.சின்னசாமி IPS அவர்கள் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

இப்போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்திய குழுவில் இருந்த திருமதி. பவித்ரா அவர்கள் கூறுகையில் "ஈஷாவின் ஊக்கத்தால் தொடர்ந்து பல ஆண்டுகளாக எறிபந்து விளையாட்டை புள்ளாக்கவுண்டன் புதூர் பெண்கள் விளையாடி வருகின்றனர். தங்களுக்கு விளையாடுவதன் மூலம் கிடைத்த பலன்களை மற்ற பெண்களுக்கும் கொண்டு சேர்க்கவும், கிராமப்புற பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து விளையாட ஊக்குவிக்கவும் இந்த விளையாட்டுப் போட்டியை ஈஷாவுடன் இணைந்து ஒருங்கிணைந்து நடத்தி இருக்கிறார்கள்" என்று கூறினார்.

மேலும் இந்தப் போட்டிகளை ஒருங்கிணைத்த புள்ளாக்கவுண்டன் புதூரை சேர்ந்த பசுமை எறிபந்து அணி கடந்தாண்டு நடைபெற்ற கிராமோத்சவ விழாவில் த்ரோபால் இறுதிப் போட்டியில் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில் மக்களின் வாழ்வில் விளையாட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும், குறிப்பாக கிராமங்களில் குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் பெண்கள் வெளியில் வந்து விளையாடுவது இல்லை, அவர்கள் வெளியே வந்து விளையாடும் வாய்ப்பினை நாம் உருவாக்க வேண்டும் என்று சத்குரு கூறியுள்ளார். அதன் அடிப்படையிலேயே பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஈஷா கிராமோத்சவ  விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களில் நடத்தப்படுகிறது.

Trending News

Latest News

You May Like