பெண்கள் மகிழ்ச்சி..! மகளிா் உரிமைத் தொகை .. 3 விதிமுறைகள் தளர்வு..!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகளிா் உரிமைத் தொகை பெற ஏற்கெனவே உள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாக 3 விதிவிலக்குகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோா் குடும்பங்களை சோ்ந்த, ஓய்வூதியதாரா் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
அரசு துறைகளில் மானியம் பெற்று அதன்மூலம் 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களை சோ்ந்த பெண்களும் மகளிா் உரிமைத் தொகை பெற தகுதியானவா்கள்.
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம் ஆதரவற்ற, விதவைகள் ஓய்வூதியம் பெறுவோா் குடும்பங்களில் ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
கணவரால் கைவிடப்பட்ட, 50 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் மற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவில் தெரவிக்கப்பட்டுள்ளது.