1. Home
  2. தமிழ்நாடு

காவல் நிலைய வளாகத்தில் பெண் தலை.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

காவல் நிலைய வளாகத்தில் பெண் தலை.. விழுப்புரத்தில் பரபரப்பு..!


விழுப்புரம் டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, நேற்று மாலை 5 மணிக்கு தகவல் பரவியது. இதையடுத்து, டவுன் போலீசார் இரண்டு மணி நேரமாக பல்வேறு இடங்களில் தேடினர்.

கடைசியாக, போலீஸ் ஸ்டேஷன் ஒட்டிய டி.இ.எல்.சி. பள்ளி மாணவர்கள் மூலம் தகவல் பரவியது தெரிந்தது. போலீசார், மாணவர்களிடம் விசாரித்ததில், வகுப்பறை பக்கவாட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது போலீஸ் ஸ்டேஷன் பின் பகுதியில் தலை கிடந்ததை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பார்த்தபோது, பயன்படுத்தப்படாத கழிவறை முன் பெண்ணின் தலை மற்றும் துண்டிக்கப்பட்ட கூந்தல் கிடந்தது. டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

துண்டிக்கப்பட்ட தலையின் முகம் தீயில் கருகி, அழுகிய நிலையில் இருந்தது. ஒரு வாரத்திற்கு முன் துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே துண்டிக்கப்பட்ட தலை கிடந்தது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like