வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி பெண்.. கொரோனா வார்டில் சேர்ப்பு !

வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி பெண்.. கொரோனா வார்டில் சேர்ப்பு !

வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி பெண்.. கொரோனா வார்டில் சேர்ப்பு !
X

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது.

பின்னர் தனிமைப்படுத்த அவரை வீட்டில் இருந்து அழைத்துச்செல்ல சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியினர் வரவில்லை என புகார் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டார். இந்த வீடியோ வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிக்டாக்கில் வைரல் ஆனது.

இதைத் தொடர்ந்து பலரும் பீதியடையவே, அவரைப் பற்றி பலரும் தேடிவருகின்றனர். இந்த நிலையில் அந்த பெண் அம்பத்தூர் மண்டலத்தில் வசித்து வருவதும், அவர் பெயர் ரஜினி பிரியா என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், அப்பெண்ணின் வீட்டிற்கு அருகே வசிக்கிறேன் என்று கூறி ஒரு முதியவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி பிரியாவின் வீடியோவைப் பார்த்து பதறிவிட்டேன். எனக்கும் கொரோனா இருந்தது. இந்த வீடியோ தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினேன்.

அப்போது அவர்கள், ரஜினிபிரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை செய்யும்போது தான் வசிக்கும் இடம் திருவள்ளூர் மாவட்டம் என்று கூறியுள்ளார்.


 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டால் அவர்களுக்கு திருவள்ளூரில் தான் சிகிச்சை அளிக்கப்படும். அம்பத்தூர் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவர் கொடுத்த முகவரி படி அவருக்கு திருவள்ளூரில் சிகிச்சை அளிக்கப்படும் நிலை உள்ளது.

சென்னை மாநகராட்சி பட்டியலில் அவர் பெயர் இல்லை. திருவள்ளூர் மாவட்ட பட்டியலில் பெயர் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் திருவள்ளூர் செல் மறுத்துள்ளார்.

தற்போத ரஜினி பிரியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் ஐடிஐ மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில் சேர்த்துள்ளனர். 

பிரச்னை என்ன என்று தெரிந்துகொள்ளாமல், சிலர் விளம்பரத்துக்காக இப்படி வீடியோ வெளியிடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது. இது கொரோனா போராளிகளை மனச்சோர்வு அடைய காரணமாகிவிடுகிறது.

இதுபோன்ற போலி வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். எனினும் கொரோனா பாதித்தோர்  இது போன்று வீடியோக்களை வெளியிட்டு வருவதால் மக்கள் கலக்கம் அடைகின்றனர். 

newstm.in 

Next Story
Share it