1. Home
  2. தமிழ்நாடு

ஒரு நைட்டியை ரூ.60,000 கொடுத்து வாங்கிய பெண்... ஆன்லைனில் மோசடி!

ஒரு நைட்டியை ரூ.60,000 கொடுத்து வாங்கிய பெண்... ஆன்லைனில் மோசடி!


ஆன்லைன் மூலம் நைட்டி வாங்கிய பெண் ஒருவரிடம் 60,000 ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 32 வயதான செல்வராணி கிளப் பேக்டரி என்ற செயலியின் மூலம் 550 ரூபாய் மதிப்புக்கு நைட்டி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் நைட்டி குறிப்பிட்ட நேரத்தில் வராததால் ஆர்டரைக் கேன்சல் செய்து, பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் கஸ்டமர் கேரில் பேசியவர் டீம் வியூவர் என்ற செயலியை டவுன்லோட் செய்ய சொல்லி, அதில் ஏடிஎம் கார்டின் முன் மற்றும் பின் பக்கங்களை போட்டோ எடுத்து அனுப்ப சொல்லியுள்ளார். 


பின்னர் வந்த ஓடிபி நம்பரை சொல்ல சொல்லியுள்ளார். அதையும் செல்வராணி சொல்லவே, அந்த வங்கிக் கணக்கில் இருந்து 60,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண் அழைத்த கஸ்டமர் கேர் எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like