6 குழந்தைகளுடன் உணவின்றி சுடுகாட்டில் தவிக்கும் பெண்.. ஊரடங்கால் நேர்ந்த சோகம்..!

6 குழந்தைகளுடன் உணவின்றி சுடுகாட்டில் தவிக்கும் பெண்.. ஊரடங்கால் நேர்ந்த சோகம்..!

6 குழந்தைகளுடன் உணவின்றி சுடுகாட்டில் தவிக்கும் பெண்.. ஊரடங்கால் நேர்ந்த சோகம்..!
X

கூலி வேலைக்கு பெங்களூரு சென்ற கணவர் வீடு திரும்ப முடியாத நிலையில் ஆறு குழந்தைகளுடன் இளம்பெண் சுடுகாட்டில் தங்கிய சோகம் நிகழ்ந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அடுத்த கலத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரமீளா(29). இந்த தம்பதிக்கு ஒரு மாத பச்சிளம் குழந்தை உள்பட 6 குழந்தைகள் உள்ளன. கூலி வேலை காரணமாக, எங்கும் நிலையாக வசிக்காமல், சில காலம் பெங்களூரு, பிறகு கலத்தம்பட்டு என மாறி மாறி வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் முருகன் கலத்தம்பட்டு வந்தார்.

சொந்த வீடு இல்லாத தால் தாத்தா கண்ணுசாமி(70) பாட்டி தனம்மணி(65), ஆகியோருடன் அப்பகுதி சுடுகாட்டில் உள்ள காத்திருப்போர் கூடத்தில், பிளாஸ்டிக் தார்ப்பாய் கட்டி வசித்து வந்தனர். 
நிலையான விலாசம் இல்லாததால், முருகன் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு இல்லை. ஆனால், அவரது உறவினர் ஒருவரின் விலாசத்தில் கலத்தம்பட்டு கிராம வாக்காளர் பட்டியலில் மட்டும் இவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. 

இந்நிலையில், கடந்த மாதம் 15ஆம் தேதி முருகன் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றார். ஊரடங்கு பிறப்பிக்கபட்டதால், பெங்களூரில் இருந்து வர முடியாமல்,அங்கேயே தங்கி விட்டார். தனால், முருகன் மனைவி பிரமிளா, வயதான முதியவர்கள் மற்றும் ஆறு குழந்தைகளுடன், சுடுகாட்டில் உணவின்றி தவித்து வருகிறார்.

முருகன் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு இல்லாததால், கொரோனா நிவாரணமாக அரசு கொடுத்த உதவித் தொகையும், பொருட்களும் கிடைக்கவில்லை. கண்ணுசாமியின் உறவினர் வீட்டு விலாசத்தில், கண்ணுசாமிக்கு ரேஷன் கார்டு இருந்ததால், அவருக்கு வழங்கிய நிவாரணத்தில் இது வரை சாப்பிட்டு வந்தனர்.

தற்போது, பணம், அரிசி, மளிகை பொருட்கள் தீர்ந்து விட்டதால், அடுத்த வேளை உணவிற்கு வழியின்றி, ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு முதியோருடன் பிரமீளா மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இவர்களுக்கு அரசின் உதவி கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவ முன்வருவோர், பிரமீளாவின் உறவினர் பால்ராஜ்பெல்சனி, 88701 82504 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in 

Next Story
Share it