10 நிமிடம் தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பெண்!

போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை தவறவிட்ட பெண் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்திருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
கணவரோடு லண்டனில் வசித்துவரும் பூமி சவ்கான் என்ற பெண், விடுமுறையை கழிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டுள்ளார்.
விமானத்தை தவறவிட்ட ஏமாற்றத்தில் இருந்த பூமி சவுகானுக்கு விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், " நான் முற்றிலுமாக உருக்குலைந்து போனேன். என்னால் பேசக்கூட முடியவில்லை. விபத்தை எண்ணி பார்த்து எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. என் உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்