வில்லன் நடிகரை பெண் அறைந்தால் பரபரப்பு..!
அக்டோபர் 18ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆன படம் லவ் ரெட்டி. இந்தப் படத்தினை இயக்குநர் ஸ்மரன் ரெட்டி இயக்க, அதில் அஞ்சன் ராமச்சந்திரா, ஷ்ரவாணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு பிரின்ஸ் ஹாரி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், பல காட்சிகள் இப்போதும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டு உள்ளது.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் என்.டி. ராமசாமி நடித்திருந்தார். அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். படம் பார்த்த பலரும் அவரது வில்லத்தனத்தை பாராட்டினர்.
இந்நிலையில் கோலாரில் உள்ள மல்டி ஃபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களை படம் முடிந்த பின்னர் படக்குழுவினர் சந்தித்தனர்.
இப்படியான நிலையில் படம் பார்த்த ரசிகை ஒருவர், கூட்டத்திற்குள் இருந்து ஓடி வந்தார்.
ஓடிவந்த பெண் வில்லன் நடிகர் என்.டி. ராமசாமியை நோக்கி ஓடி வந்தார். மேலும், அவரை சராமாரியாக தாக்கினார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், என்.டி. ராமசாமியின் கன்னத்திலேயே பளார் பளார் என அறைவிட்டார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணைத் தடுத்தனர். மேலும் அந்தப் பெண் என்.டி. ராமசாமியைத் தாக்கும்போது, " அவர்களைச் சேர விடமாட்டயா" எனக் கூறிக்கொண்டே அடித்தார். அருகில் இருந்தவர்கள் தடுத்தபோது அவர்களை மீறியும் வந்து அடித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
Rey Entra edhi 🤣🤣🤣🤣🤣🤣pic.twitter.com/D2ZaOkBb63
— 🤙🏻😎 (@Ntr1166177) October 25, 2024
Rey Entra edhi 🤣🤣🤣🤣🤣🤣pic.twitter.com/D2ZaOkBb63
— 🤙🏻😎 (@Ntr1166177) October 25, 2024
.png)