1. Home
  2. தமிழ்நாடு

பெண் எஸ்.ஐ காவல் நிலையத்திலேயே மரணம்..! இறப்பிற்கு என்ன காரணம்..? நாமக்கல் எஸ்.பி. விளக்கம்..!

1

நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சப்டிவிஷன், பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீஸ் எஸ்.எஸ்.ஐயாக காமாட்சி என்பவர் கடந்த 21.09.2023-ம் தேதி முதல் பணியாற்றி வந்தர். அவர் கடந்த ஜூலை 1ம் தேதி நைட் டூட்டி அதிகாரியாக பணியாற்றி, பணி நேரம் முடிந்து, நேற்று  2ம் தேதி அதிகாலை போலீஸ் ஸ்டேஷன் திரும்பி வந்து, முதல் மாடியில் உள்ள பெண்கள் ஓய்வு அறையில் ஓய்வு எடுத்துள்ளார்.

காலை சுமார் 11.30 மணி வரை ஓய்வு முடித்து பணிக்கு வராததால் மற்ற பெண் போலீசார் சென்று பார்த்த போது, காமாட்சி ஓய்வு அறையில் படுக்கையில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து இறந்தவரின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இறந்து போன எஸ்எஸ்ஐ காமாட்சிக்கு கடந்த 3 மாதங்களில் (90 நாட்களில்) மெடிக்கல் லீவ் 40 நாட்களும், சாதாரண லீவ் 2 நாட்களும், 3 நாள் பர்மிஷன் லீவும், 1 நாள் திருமண நாள் சிறப்பு லீவும் வழங்கப்பட்டுள்ளது. சில சோஷியல் மீடியாக்களில் பெண் எஸ்எஸ்ஐ குடும்பத்தினர் கூறியதாக, எஸ்எஸ்ஐ காமாட்சிக்கு சரியான லீவ் வழங்காததால், பணிச்சுமை அதிகரித்து, உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு மாறானது. அவரது இறப்பு குறித்து விசாரணை முடிவில் முழு விபரம் தெரியவரும் என கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like