1. Home
  2. தமிழ்நாடு

தனக்கு ஆப்பிள் ஜாம் அனுப்பிய பெண்ணை கவுரவப்படுத்தும் பிரதமர் மோடி..!!

pm modi
பிரதமர் மோடிக்கு ஆப்பிள் ஜாம் அனுப்பி பாராட்டுக்களை பெற்ற சுனிதா ரவுதாலா என்கிற பெண் மற்றும அவருடைய குடும்பத்தினரை செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை வரவிருக்கும் 76-வது சுதந்திர தினத்தை கொண்டாட ஒட்டுமொத்த நாடுமே தயாராகி வருகிறது. தலைநகர் டெல்லி களேபரமாக தயாராகி வருகிறது. பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

புது டெல்லியில் இருக்கும் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேர்றுகிறார். அதை தொடர்ந்து நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றுகிறார். மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் பல தரப்பு மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதிலும் இருந்தே 50 ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அதேபோன்று பல்வேறு தொழில்களைச் செய்து வரும் 1800 பேர் தங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்கின்றனர். 

அந்த நிகழ்வில் உத்தரகாண்டின் உத்தரகாசி பகுதியைச் சேர்ந்த விவசாயி சுனிதா ரவுதாலாவும் கலந்துகொள்ளவுளார். தன்னுடைய ஜாலா கிராமத்தில் ஆப்பிள் விவசாயம் செய்து வரும் அவர், 162 பேரை ஒருங்கிணைத்து விவசாய கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த சங்கத்தின் மூலமாக பல்வேறு பழ ஜாம்களை தயாரித்து அவர் விற்பனை செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் சுனிதா தயாரித்த ஆப்பிள் ஜாமை பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பி வைத்தார். 

அவருடைய முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுனிதா ரவுதாலாவை கலந்துகொள்ளக் கேட்டு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க சுனிதா டெல்லி செல்லவுள்ளார்.
 

Trending News

Latest News

You May Like